எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தியோகபூர்வ அழைப்பாணை ஒன்றை அனுப்பியுள்ளது!
ஆணைக்குழுவினால் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் மிக முக்கியமான விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் (Statement) வழங்குவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி, இந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி ஆணைக்குழுவில் நேரில் முன்னிலையாகுமாறு அவருக்கு எழுத்துப்பூர்வமான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், சமிந்த குலரத்னவை நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக நியமிப்பதற்கான நேர்காணல் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒரு முக்கிய உறுப்பினராகச் செயற்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதுகுறித்த தெளிவுபடுத்தல்களைப் பெறவே இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
தற்போதைய திசைகாட்டி அரசாங்கத்தின் கீழ், சர்ச்சைக்குரிய இந்த அதிகாரி சமிந்த குலரத்னவின் சேவை ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




