Welcome to Jettamil

பிரிட்ஜைத் திறந்த குடும்பத்திற்கு அதிர்ச்சி! உள்ளே தானாக உருவான பனிச் சிவலிங்கம்!

Share

பிரிட்ஜைத் திறந்த குடும்பத்திற்கு அதிர்ச்சி! உள்ளே தானாக உருவான பனிச் சிவலிங்கம்!

இந்தியாவில் தற்பொழுது அமர்நாத் யாத்திரை நடைபெற்று வரும் வேளையில், உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு வீட்டின் குளிர்சாதனப் பெட்டிக்குள் இயற்கையாக உருவான பனிக்கட்டி ஒன்று, அப்படியே சிவலிங்கம் போன்ற அமைப்பில் காட்சியளிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ராவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியை (Fridge) வழக்கம் போலத் திறந்தபோது, ஃப்ரீஸர் பகுதிக்குள் விசித்திரமான வடிவில் பனிக்கட்டி ஒன்று உறைந்திருப்பதைக் கண்டுள்ளனர்.

அதை உற்று நோக்கியபோது, அது அப்படியே அச்சு அசலாகச் சிவலிங்க உருவ அமைப்பில் இருப்பதை உணர்ந்து ஆச்சரியமடைந்துள்ளனர்.

இந்த விபரம் அக்கம் பக்கத்தினருக்குத் தெரியவர, அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த விசித்திர பனிச் சிவலிங்கத்தைக் காண்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த வீட்டில் குவியத் தொடங்கினர்.

பக்திப் பரவசமடைந்த பொதுமக்கள் அதற்கு ‘ஜலாபிஷேகம்’ செய்து, “ஹர் ஹர் மகாதேவ்” என முழக்கமிட்டு வழிபடத் தொடங்கியதால் அந்த வீடே தற்பொழுது ஒரு வழிபாட்டுத் தலமாக மாறியுள்ளது.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகித் தீயாய் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதமே கிளம்பியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை