Welcome to Jettamil

நாட்டை உலுக்கிய கோர சம்பவம்.. 11 பேர் பரிதாப மரணம்

Share

நாட்டை உலுக்கிய கோர சம்பவம்.. 11 பேர் பரிதாப மரணம்

அங்குருவத்தோட்டா – படகொடா பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஏழு பேர் ஹொராணை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தின் போது, இல்லத்தில் சுமார் 72 பேர் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தீ பரவியதைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்பு மற்றும் தீயணைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, இல்லத்தில் இருந்த சுமார் 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியாரால் நிர்வகிக்கப்பட்டு வந்த இந்த இல்லத்தில் முதியோர்களுடன் மனநலம் பாதிக்கப்பட்ட சிலரும் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீ விபத்தில் சிக்கியவர்களில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை நீதித்துறை விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், உயிரிழந்தவர்களின் சடலங்கள் சம்பவ இடத்திலிருந்து அகற்றப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த துயர சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை