கண்டி, நாவலப்பிட்டியில் கோர விபத்து: மாணவன் உட்பட மூவர் உயிரிழப்பு
கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துயரமான விபத்தில், பாடசாலை மாணவன் ஒருவரும் இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் தெரிவித்ததாவது, மபாகந்த பகுதியில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, பிரதான வீதியோரத்தில் இருந்த பாரிய மரமொன்று திடீரென முறிந்து விழுந்துள்ளது.
இந்த எதிர்பாராத விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மாணவன் ஒருவரும் இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, முச்சக்கர வண்டியின் சாரதி எவ்வித காயங்களும் இன்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





