இந்தியாவில் கோவிட் தொற்று அதிகரித்தும் வரும் நிலையில், கங்கை நதியில் நீராடச் சுமார் 1 மில்லியன் மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகரசங்கிராந்தியை முன்னிட்டு, வரும் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் கங்கை நதியில் மக்கள் புனித நீராடவுள்ளனர்.
ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் மேற்கு வங்க மாநிலத்தில் குவிந்துள்ளதாகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் அந்த நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்று கூறப்படுகிறது.
நீராடும் நிகழ்ச்சியைத் தடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அது பெரிய அளவில் நோய்ப்பரவலை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.