குழப்பத்தை ஏற்படுத்துகிறது அநுர அரசு – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விமர்சனம்!
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தலையிடுவதன் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பல முயற்சிகளை முன்னெடுத்தாலும், அவை இறுதியில் தோல்வியிலேயே முடிகின்றன என மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தில் ஒரு சில நேர்மறையான விடயங்கள் இருந்தாலும், பெரும்பாலானவை எதிர்மறையாகவே அமைந்துள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னரே, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இந்த விமர்சனங்களை முன்வைத்தார்.





