ஒமிக்ரோன் திரிபு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக யாழில் பூஸ்டர் தடுப்பூசி வழங்கலை துரிதப்படுத்தும் நடவடிக்கையினை இராணுவம் முன்னெடுத்துள்ளது.
யாழ் கோட்டை பகுதியில் இராணுவ நடமாடும் தடுப்பூசி வழங்கும் பிரிவினரால் மூன்றாம் கட்ட பைசர் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் தொற்று அதிகரித்து வரும் நிலையில், யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் பணிப்புரையின் கீழ் ஒமிக்ரோன் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினரால் இச் செயற்திட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மூன்றாம் கட்ட பைசர் தடுப்பூசியைப் பெறுவதில் தயக்கம் காட்டி வரும் நிலையில், இராணுவத்தினரால் குறித்த தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.