Welcome to Jettamil

இன்று காலை நல்லூரில் இடம்பெற்ற நெற்புதிர் அறுவடை விழா

Share

நெற்புதிர் அறுவடை விழா, தைப்பூசத்தினத்துக்கு முதல் நாள் கடைப்பிடிக்கப்படும். இவ் விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய மட்டுவிலில் உள்ள நல்லூர் ஆலயத்துக்குச் சொந்தமான வயலுக்குச் சென்றனர்.

அறுவடை செய்யும் வயல் நெல்லில் இருந்து அமுது தயாரித்து முருகப்பெருமானுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெறுவது வழமை.

அதன் பின்னர் பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக பண்பாட்டு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இப் புதிர் விழா இந்த வருடம் 288ஆவது வருடமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

படங்கள் : ஐ.சிவசாந்தன்

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை