உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய படைகள் 18 வது நாளாக தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.
போரை நிறுத்துவதற்கு நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்தநிலையில், உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள மைகோலயிவ் நகரில், விமானம் மூலம் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 54 பேர் காயமடைந்ததாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று மேற்கு உக்ரைன் பகுதியில் உள்ள ராணுவ நிலைகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததாக லிவிவ் மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.
அதேவேளை, உக்ரைனில் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். தலைநகர் கீவின் வடமேற்கு புறநகர் பகுதியான இர்பினில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க பத்திரிகையாளர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.