உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக, போலந்துக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,
“உக்ரைனில் பாதுகாப்பு சூழ்நிலை மோசமடைந்து வருவதாலும், மேற்கு பகுதியில் தொடர் தாக்குதல் நடப்பதாலும், அந்நாட்டிற்கான இந்திய தூதரகத்தை தற்காலிகமாக போலந்துக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் காலங்களில், ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து மறு ஆய்வு செய்யப்படும்.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.