முல்லைத்தீவு- வட்டுவாகல் பகுதியில், தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார், மேலும் 21 பேர் காமடைந்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்து, வட்டுவாகல் பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னால் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தை, முந்தி செல்ல முற்பட்ட போதே தனியார் பேருந்து வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்தில் 23 பேர் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனையவர்கள் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.