முந்தலமவில் கார்-வான் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் பலி, 8 பேர் படுகாயம்!
முந்தலம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (12.01.2026) அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மூவர் பலியாகியுள்ளதுடன், எட்டுப் பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வான் ஒன்று, எதிர் திசையில் வந்த காருடன் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
காரில் பயணித்த நால்வரில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
வானில் பயணித்த 7 பேரும், காரில் பயணித்த ஒருவரும் என மொத்தம் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் உடனடியாகப் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முந்தலம பொலிஸார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சேதமடைந்த வாகனங்களை வீதியிலிருந்து அகற்றும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.





