33 ஆண்டுகளுக்கு முன் பதிவான வழக்கு: 84 வயது முதியவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை
பீகார் மாநிலத்தில் 33 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட கொ*லை முயற்சி வழக்கில், 84 வயதான முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு தற்போது இணையத்திலும் சமூகத்திலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த தீப் ராய் என்பவருக்கு எதிராக 1992ஆம் ஆண்டு கொ*லை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கிராமத்தில் ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதையடுத்து இந்த வழக்கு தொடரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கின் விசாரணை நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில், 1993ஆம் ஆண்டு காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதன் பின்னர் வழக்கு பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
விசாரணை காலத்தில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு, 84 வயதான தீப் ராய்க்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.





