எரிவாயு விலையில் ஏற்படப்போகும் மாற்றம்
புதிய VAT திருத்தங்களின் மூலம், எரிவாயு விலை ஜனவரி 1 முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
ஆனால் எரிவாயுவுக்கு இதுவரை வசூலிக்கப்பட்ட துறைமுகம் மற்றும் விமான சேவைகளில் 2.5% தொகை நீக்கப்பட்டுள்ளது.
அதன்படி எரிவாயுவின் விலை 15.5% இனால் அதிகரிக்கப்படவுள்ளது.
புதிய வரி சதவீதத்துடன்லித்ரோ எரிவாயு நிறுவனத்தின் பன்னிரண்டரை கிலோகிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், தற்போது அதே எரிவாயு சிலிண்டர் 3565 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.