Welcome to Jettamil

தாயின் கண்முன்னே தம்பியை கொலை செய்த அண்ணன்

Share

தாயின் கண்முன்னே தம்பியை கொலை செய்த அண்ணன்

தாயின் கண்முன்னே தம்பியை துடிக்க துடிக்க கொலை செய்த அண்ணனின் கொடூர செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அநுராதபுரம் – கல்நேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புல்நேவ, ஹிரிபிட்டியாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் தோட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதமானது எல்லை மீறிய நிலையில் குடும்ப உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,,,

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் அவுகன, சிறிமாகம பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

கடற்படையில் பணியாற்றிய அவர், விபத்தில் சிக்கி முற்றிலும் ஊனமுற்ற நிலையில் ஓய்வு பெற்றிருந்துள்ளார்.

இரவு 8.30 மணியளவில் சகோதரர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மூத்த சகோதரர் பின்னால் வந்து மண்வெட்டியின் பக்கவாட்டில் தம்பியின் தலையில் தாக்கியுள்ளார்.

பின்னர் கீழே விழுந்த தம்பியை மண்வெட்டியால் பலமுறை அடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த அவரது தாய் தெரிவித்துள்ளார்.

மேலும் தமக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும், இரண்டாவது பிள்ளை திருமணமாகாதவர் என்றும், அவருடன் வீட்டில் வசித்து வருவதாகவும், இளைய மகன் இரண்டாவது மகனால் இவ்வாறு கொல்லப்பட்டதாகவும் தாய் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் செல்லும் போது கைது செய்யப்பட்டதாக கல்நேவ பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை