அரச சேவையை மேலும் விரிவுபடுத்த முடியாது : அமைச்சர் ரமேஷ் பத்திரன
அரச சேவையை மேலும் விரிவுபடுத்த முடியாது என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
சனத்தொகை விகிதாச்சாரத்தில் உலகிலேயே அதிகளவான அரச ஊழியர்களைக் கொண்ட நாடாக இலங்கை விளங்குவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.