Welcome to Jettamil

நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாடு – அரசு நடவடிக்கை

Share

நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாடு – அரசு நடவடிக்கை

வடக்கில் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றும்போது, அவர் இந்த நடவடிக்கைகளை விளக்கினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் 40,000 ஹெக்டயர் தென்னை மர பயிர்ச்செய்கைக்காக 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் 1,437 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளதாக கூறினார்.

அத்துடன், நாட்டில் 5 ஹெக்டயருக்கும் குறைவான தென்னை தோட்டங்களுக்கு இலவச உரம் வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், ரஷ்யாவிலிருந்து பெற்ற 55,000 மெட்ரிக் தொன் உரத்தில் 27,500 மெட்ரிக் தொன் உரம் தேங்காய் பயிர்ச்செய்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை