Welcome to Jettamil

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர் வார நினைவேந்தல் ஆரம்பம்: ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி!

Share

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர் வார நினைவேந்தல் ஆரம்பம்: ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி!

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களை நினைவுகூர்ந்து, ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி வாரம் இன்றையதினம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21, 2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவீரர்களின் உரித்துடையோர்கள், ஏற்பாட்டுக் குழுவினர், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலியைச் செலுத்தியிருந்தனர்.

அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஏற்பாட்டாளர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்:

“ஆண்டுதோறும் நடத்தப்படுகின்ற, எங்களுக்காக உயிரைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் பிரதான நிகழ்வு எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி இதே முல்லைத்தீவு கடற்கரையிலே நடைபெற இருக்கின்றது.”

“குறித்த கடற்கரை கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குரியதாக இருக்கின்றதனால், கடற்கரையை பயன்படுத்துவதற்குப் பிரதேச சபையின் தவிசாளரிடம் முன் அனுமதி பெற்றிருக்கின்றோம்.”

கார்த்திகை 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் கடற்கரையை நாங்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே, மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் அனைவரும் இந்நாளில் வருகை தந்து நினைவஞ்சலியை மேற்கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை