Welcome to Jettamil

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த  விபரங்கள் தெரியாது…

Share

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் உள்ளிட்ட எந்த விபரங்களும் தனக்குத் தெரியாது என ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நேற்று ஆறுமுகசாமி ஆணையத்தில், முன்னிலையாகிய அவரிடம், மூன்றரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டு, 78 கேள்விகள் கேட்கப்பட்டன.

இதன்படி, மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள்,  என்ன சிகிச்சை வழங்கப்பட்டது? எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்ற எந்த தகவலும் தெரியாது.

எதற்காக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் தெரியாது.

சொந்த ஊரில் இருந்த எனக்கு நள்ளிரவில் உதவியாளர் கூறிதான் விவரம் தெரியும். மறுநாள் தலைமை செயலாளரை நேரில் சந்தித்து தகவல் அறிந்தேன்.

மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முந்தைய நாள், மெட்ரோ ரயில் நிலைய விழாவில் தான் அவரை பார்த்தேன். அதற்குப் பிறகு ஜெயலலிதாவை நேரில் சந்திக்கவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். மின்தடை காரணமாக இறுதி நேரத்தில் விசாரணை நிறுத்தப்பட்டது.  நாளை மீண்டும் ஆஜராகும்படி ஓ.பன்னீர்செல்வத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை