எமக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கு மே தினத்தில் குரல் கொடுக்க முன்வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மே தின நிகழ்வுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எங்களுடைய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கின்றன.
இந்த மே தினத்தில் நாங்கள் எங்கள் அறைகூவலை கொடுக்க இருக்கின்றோம்.
இன்று கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து பசுமை பூங்கா வளாகம் வரை பேரணியாக சென்று அங்கே பொதுக்கூட்டம், கண்டன உரை நடைபெற உள்ளதாகவும் அதில் அனைத்து மக்களையும் ஒன்றிணையுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.