ட்ரம்பின் கையை மீறியதா ஈரான் போர்? ஜனாதிபதி பதவிக்கு ஆபத்து
ஈரான் போர் மூன்றாவது வாரத்தைக் கடந்துள்ள நிலையில், போர் தனது கட்டுப்பாட்டை மீறிச் செல்வதை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உணர்ந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகளாவிய எரிசக்தி விலையேற்றம் மற்றும் அமெரிக்கா தனது நட்பு நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழல், ட்ரம்பிற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
“குறுகிய காலப் பயணம்” என வர்ணிக்கப்பட்ட இந்தப் போரில், தற்போது மேலதிக அமெரிக்கத் துருப்புக்கள் நிலைநிறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்க உதவ மறுத்த நேட்டோ உறுப்பு நாடுகளை “கோழைகள்” எனத் தற்காப்பு நிலையில் இருந்த ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.
போர் “இராணுவ ரீதியாக வெல்லப்பட்டது” என அவர் அறிவித்த போதிலும், வளைகுடாப் பகுதி முழுவதும் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்து வருவது யதார்த்த நிலைக்கு முரணாக உள்ளது.
ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டாலும், அதன் ஏவுகணைத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் வெள்ளை மாளிகை திணறி வருகிறது.
தேவையற்ற இராணுவத் தலையீடுகளில் இருந்து அமெரிக்காவை விலக்கி வைப்பதாக உறுதியளித்துத் தேர்தலைச் சந்தித்த ட்ரம்ப், தற்போது ஒரு முடிவற்ற போருக்குள் சிக்கியுள்ளார்.
இது நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
போரிலிருந்து வெளியேறுவதற்கான தெளிவான திட்டம் எதுவும் இல்லாதது, ட்ரம்பின் ஜனாதிபதி பதவிக்காலத்திற்கே உலை வைக்கும் என மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஆலோசகர் ஆரோன் டேவிட் மில்லர் எச்சரித்துள்ளார்.





