யாழ்ப்பாண பாதுகாப்புப்படைத் தலைமையக கட்டளைத்தளபதி வடக்குமாகாண கெளரவ ஆளுநருடன் கலந்துரையாடல்
வடக்குமாகாண கெளரவ ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களுக்கும் யாழ் பிராந்திய பாதுகாப்புப்படைத் தலைமையகக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (19/02/2024) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பிராந்தியத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உரிய வகையில் முன்னெடுத்து செல்லல், பொது மக்களின் நாளாந்த வாழ்வியல் செயற்பாடுகளின் போது தேவையான பாதுகாப்பை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள குடியேற்றப்பட்டவர்களுக்காக பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டம் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.