இன்று அதிகாலை 3 மணி முதல் எரிபொருள்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 பெற்றோல் விலை லிட்டருக்கு 82 ரூபாவினால், அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 பெற்றோல் விலை, லிட்டருக்கு 77ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது
ஓட்டோ டீசல் விலை லிட்டருக்கு 111ரூபாவினாலும், சூப்பர் டீசல் 116 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோலின் புதிய விலை, 420 ரூபா என்றும், ஒக்டேன் 95 பெற்றோல் விலை 450 ரூபா என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓட்டோ டீசலின் புதிய விலை, 400 ரூபாவாகவும், சூப்பர் டீசல் விலை 445 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.