Welcome to Jettamil

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக புகைப்பட கண்காட்சி

Share

தென் இலங்கையில் உள்ள புகைப்பட நிறுவனம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட புகைப்பட விற்பனை நிறுவனத்தின் எற்பாட்டில் முதலாவது தடவையாக ஒழுங்கமைத்த யாழ்ப்பாண புகைப்படக் கண்காட்சி இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

நவீன யுத்திக்கு ஏற்ப புகைப்படக்கருவி சாதனங்கள், புகைப்பட பிரதியினை பிரதிபலிக்ககூடிய ஆல்பம் மூலம் பிரிண்ட் செய்யும் நவீன கருவிகள், இணைய சாதனம், ஆல்பம் கட்டும் முறை தொடர்பாக இக்கண்காட்சியில் நிபுணர்களால் தெளிவூட்டப்பட்டது.

இக்கண்காட்சியினை ஆரம்பித்து வைப்பதற்காக தென் இலங்கை பிரபல புகைப்பட விற்பனை நிறுவனத்தின் தலைவர் ஆர்.பி.ஜெயந்த குணவர்த்த கலந்துகொண்டு இதனை ஆரம்பித்து வைத்தார்.

இதில் கண்காட்சிக் குழுவினர்கள், புகைப்படக் கலைஞர்கள் பங்குபற்றிக் கொண்டனர்.

இக்கண்கண்காட்சி நாளை இனிதே நிறைவடையும். இக்கண்காட்சியினை கண்டுகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர்கள் கேட்டுக்கொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை