இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் 15 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக குறைந்த பேருந்து கட்டணம் 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
செகுசு, அரை சொகுசு மற்றும் அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட சகல பேருந்துகளுக்குமான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய பேருந்து கட்டணம் தொடர்பான அறிவித்தல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
அத்துடன் தொடருந்து கட்டணத்தையும் எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.