Welcome to Jettamil

ஏப்ரலின் பின்  சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறையும்…

Share

ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கனியவள கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை  கனியவள கூட்டுதாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நேற்றைய தினம் 5 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.இதற்கமைய ஒரு பீப்பாய் ப்ரெண்ட் ரக எண்ணெய்யின் விலை 5.77 அமெரிக்க டொலர் வீழ்ச்சியடைந்து 106.90 அமெரிக்க டொலராகப்  பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு தொடர்ந்த வண்ணமே உள்ளது . பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்கள் தமது வாகனங்களுடன் வரிசையில் நிற்கும் நிலை  நேற்றைய தினமும் காணக்கூடியதாகவிருந்தது.குறிப்பாக டீசல் பற்றாக்குறையே நாட்டில் அதிகமாக காணப்படுகின்றது.

சடுதியாக அதிகரித்த எரிபொருள் ஏற்றம் காரணமாக மக்கள் கடும் சிரமங்களை எதிரிகொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் மக்கள் மத்தியில் எப்போது எரிபொருள் குறைவடையும் என்ற கேள்வி நிலவி வருகின்றது .

அந்த வகையில் கனியவள கூட்டுதாபனம் தலைவர் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக  தெரிவித்துள்ளார் .

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை