யாழில் கோர விபத்து: கனரக வாகனத்துடன் மோதி இளைஞன் பலி!
யாழ்ப்பாணம், தெல்லிப்பழைச் சந்திக்கு அருகில் நேற்றிரவு திங்கட்கிழமை (நவம்பர் 3, 2025) இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மயிலிட்டியைச் சேர்ந்த 35 வயதுடைய வசந்த் எனும் இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த இளைஞன், மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி வீதியில் விழுந்த வேளையில், அதே வீதியில் வந்த கனரக வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாகத் தெல்லிப்பழை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





