Welcome to Jettamil

தேங்காய் தலையில் விழுந்து மகன் உயிரிழப்பு…

Share

தந்தையால் பறிக்கப்பட்ட தேங்காய் ஒன்று மகனின் தலையில் விழுந்ததில் மகன் உயிரிழந்துள்ளதாக நமுனுகுல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மியானகந்துர மகா வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் எச்.எம்.சமீரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 29ஆம் திகதி அன்று மாலை 6.30 மணியளவில் தந்தை தோட்டத்திலுள்ள 50 அடி உயர மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் போது, ​​இந்த மகன் வீட்டை விட்டு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் தந்தை பறித்த தேங்காய் மகனின் தலையில் விழுந்துள்ளது.

ஆகவே, படுகாயமடைந்த மகன் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (31) காலை உயிரிழந்துள்ளதுடன், கவனக்குறைவாக தேங்காய் பறித்த குற்றச்சாட்டின் கீழ் 55 வயதுடைய தந்தைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை