Welcome to Jettamil

டெல்லி உணவு விடுதியில் தீ விபத்து – 21 பேர் உயிரிழப்பு

Share

டெல்லி உணவு விடுதியில் தீ விபத்து – 21 பேர் உயிரிழப்பு

டெல்லி மாளவியா நகரில் உள்ள ஒரு உணவு விடுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

காலை 9.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதுவரை 40 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பலர் மத்திய ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்த அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

மேலும், பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை