தமது கணிப்புகளின்படி, சிங்கள-தமிழ் புத்தாண்டின் போது உணவுப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அறுவடை 60 சதவீதம் குறையும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, ஒரு தற்காலிக நிவாரணமாக, எரிபொருள் மற்றும் உணவை கடனாகப் பெறுவது குறித்து, இந்தியாவுடனான கலந்துரையாடல்கள் மற்றும் ஒப்பந்தங்களை விரைவில் முடிக்குமாறும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும், கடன்கள் மற்றும் பொருட்களை கடனுக்குப் பெறுவது நாட்டில் அதிகரித்து வரும் அந்நிய செலாவணி நெருக்கடியை தீர்க்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்களின் அதிருப்தி அரசாங்கத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரித்த அவர், நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அவ்வாறான நிலைமையைத் தடுக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தை உதவிக்காக அணுக வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது, இல்லையெனில் அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய மாற்றீட்டை முன்வைக்க வேண்டும்.
இருப்பினும், அந்த இரண்டு விருப்பங்களும் இன்னும் ஆராயப்படவில்லை, ”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.