வரலாற்றில் முதன்முறையாக தேசிய உணர்வுடன் அனைவரும் பயணிக்கிறோம் – பிரதமர் தெரிவிப்பு
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பொலன்னறுவை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட, மும்மொழிக் கல்விப் பாடசாலையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரிய கலந்துகொண்டு உரையாற்றினார்.
நாட்டின் வெவ்வேறு மதங்கள், மொழிகள் மற்றும் இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்வது பெருமைக்குரிய விடயம் எனப் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களும் பங்கேற்றார்.
பிரதமர் மேலும் கூறுகையில்:
“எமது அரசாங்கத்தின் கொள்கைப்படி, அனைவரையும் ஒன்றிணைத்து முன்னோக்கிச் செல்லவே நாம் முயற்சிக்கிறோம். வரலாற்றில் முதன்முறையாக, அத்தகைய ஒரு தேசிய உணர்வுடன், தேசிய இலக்குகளை நோக்கி முன்னேற எமக்கு ஒரு பலமான தருணம் திறக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.”
“நீங்கள் அறிந்திருப்பது போல, நாம் நாட்டில் மிகவும் முக்கியமான கல்வி மறுசீரமைப்புகளைச் செயற்படுத்தும் ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். இது பாடத்திட்டங்களை புதுப்பிப்பதை விடவும், ஒரு மாற்றியமைக்கும் பயணமாகும். எமது கல்வி முறையின் மூலம் அனைத்துப் பிள்ளைகளையும் அரவணைத்து, தரமான கல்வியை வழங்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.” என பிரதமர் தெரிவித்தார் .





