ஜனாதிபதிக்கும் ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு திடீரெனப் பிற்போடப்பட்டுள்ளது.
இன்று மாலை 3.30 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் , இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருந்தது.
இந் நிலையில் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சஜித் பிறேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பில் இன்று மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன்போது ஜனாதிபதி செயலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிதிரள வாய்ப்புள்ளதாகக் கருதி,குறித்த பேச்சு வார்த்தை பிரிப்போடப்பட்டுள்ளது .
எதிர்வரும் 25ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு மேற்படி சந்திப்பு இடம்பெறும் என ஜனாதிபதி செயலாகத்தால், கூட்டமைப்பின் தலைமைக்கு இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது எனக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.