இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தி அவர் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“ நேற்று கோவிட் பரிசோதனை செய்ததில், எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் தொடர்பு கொண்ட அனைவரையும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று ஜெய்சங்கர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.