இந்திய பிரதமருக்கு அனுப்பிய ஆவணத்தில் ஒப்பமிட்ட ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து, இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தவுள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய ஆவணம் தொடர்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவறாகப் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையிலேயே, இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
13 ஆவது திருத்தச்சட்டத்தை நிராகரிப்போம், ஒற்றையாட்சிக்குள் தமிழர் பிரச்சினையை முடக்கும் சதியைத் தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாளை மறுநாள் நல்லூரில் பேரணியை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையிலேயே, இன்று காலை 10 மணியளவில் யாழ். நகரிலுள்ள யு.எஸ்.விடுதியில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.