வடக்கு கிழக்கில் மீண்டும் கன மழை – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இடையிடையே பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த சில வாரங்களாக வடக்கு கிழக்கில் பெய்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதுடன் சில குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தங்கியிருந்தனர்.
அதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 1009 குடும்பங்களை சேர்ந்த 3120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.