இந்தியாவில் ஹோலி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஹோலி பண்டிகை வட இந்தியாவில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
மக்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து தரப்பினர் மீதும் வண்ணப்பொடிகளை தூவி, ஒருவருக்கு ஒருவர் ஹோலி வாழ்த்துகளையும், தங்கள் மகிழ்ச்சியையும் பரிமாறிக்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 73 பட்டாலியனின் அஜ்னாலா தலைமையகத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஹோலி பண்டிகையை மிகவும் உற்சாகமாக கொண்டாடினர்.
ஒருவர் மீது ஒருவர் கலர் பொடியை தூவியும், ஒலி பெருக்கி மூலம் பாட்டுகளை கேட்டு ஆடியும் பாடியும் ஹோலி பண்டிகையை ஆனந்தமாக கொண்டாடினர்.
இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் கூறுகையில், “ஒவ்வொரு பண்டிகையையும் நாங்கள் குடும்பம் போல் கொண்டாடுகிறோம் என தெரிவித்துள்ளார்.