உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய திட்டம் ஆரம்பம்
இவ் வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி இந்த தொழிற்பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
பதிவு செய்த மாணவர்கள் பிற்பகல் 02:00 மணிக்கு அந்தந்த மையங்களுக்குச் சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இத் திட்டத்தின் மூலம் உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் ஆங்கில மொழி, வழிகாட்டுதல் மற்றும் அவர்கள் விரும்பும் தொழில்சார் பாடத்தை இலவசமாகப் படிக்க முடியும்.
அத்துடன், உத்தேச கல்வி சீர்திருத்தங்கள் மூலம், குழந்தைகள் அறிவு, அணுகுமுறைகள் மற்றும் திறன்களை பெற்றிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.