Welcome to Jettamil

தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள் மற்றும் பிணக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அநுர அரசு அதிரடி நடவடிக்கை!

Share

தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள் மற்றும் பிணக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அநுர அரசு அதிரடி நடவடிக்கை!

மாத்தறை – திஹகொட மிதெல்லவல விகாரையில் இன்று நடைபெற்ற தேசிய வெசாக் நன்னாள் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அங்கு மகாசங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, பௌத்த தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள் மற்றும் விகாரை நிர்வாகங்கள் தொடர்பான பிணக்குகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட “தர்ம நீதிமன்றம்” ஒன்றை நாட்டில் மீண்டும் நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தத் தர்ம நீதிமன்றத்தை சட்டப்பூர்வமாக மீண்டும் கொண்டு வருவதற்காக, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பழமையான சட்டமான 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பௌத்த அற நிலையங்கள் கட்டளைச் சட்டத்தில் அவசரத் திருத்தங்களை மேற்கொள்வதற்குக் கலைத்துறை மற்றும் புத்தசாசன அமைச்சு ஊடாக அரசாங்கம் தற்பொழுது நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பௌத்த சாசனத்தின் தூய்மையைப் பேணவும், தேரர்களுக்கு இடையிலான உட்பூசல்களைச் சட்டரீதியாகக் கையாள்வதற்கும் இந்த நீதிமன்றம் மிக முக்கிய மைல்கல்லாக அமையும் என அரசியல் மற்றும் சமய விவகார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை