Welcome to Jettamil

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்ட முக்கிய  அறிவிப்பு

Share

ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுகள் திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 17ம் திகதி  முதல் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் திகதி  மற்றும் நேரத்துடன் முன்வர வேண்டும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும் முன்கூட்டியே திகதி  மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் சேவைகளைப் பெற வருவதை அவதானித்த  குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அவ்வாறு வருபவர்களுக்கு  கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனவும்,திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே சேவை வழங்கப்படும் எனவும்  குடிவரவு மற்றும்  குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அல்லது 070 710 10 60 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை