விநியோகிப்பதற்குத் தேவையான எரிவாயு இல்லாததால் இன்று வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாளைய தினம் 3,500 தொன் எரிவாயுவை ஏற்றிச்செல்லும் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது. நாளை வரவிருக்கும் குறித்த எரிவாயு கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் வரை, எரிவாயு விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் 7,500 தொன் எரிவாயுவை பெறுவதற்கு ஏற்கனவே $6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எரிபொருளுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் சாதகமான ஒன்று என சிலோன் ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி ஆகிய நிறுவனங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இன்றி அதிகளவு எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு இந்தத் தீர்மானம் உதவும் என அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.