மத்திய சிறையில் வெளிநாட்டுக்கு காணொளி தொலைபேசி அழைப்பில் பேசிய வழக்கில், இருந்து முருகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் முருகன், கடந்த 2020ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளிநாட்டுக்கு காணொளி அழைப்பில் பேசியது தொடர்பாக சிறைத்துறை புகார் அளித்தது.
அதன் அடிப்படையில் பாகாயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் போதிய சாட்சியம் இல்லாததால் முருகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே முருகன் 6 நாள் அவசரகால விடுப்பு கேட்டு சிறைத்துறைக்கு மனு அளித்த போது, இந்த வழக்கையும், சிறை அறையில் அலைபேசி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கையும் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி விடுப்பு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.