Welcome to Jettamil

கொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பிய புதின்

Share

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அவர் தப்பிவிட்டார் என்றும்,  உக்ரைன் புலனாய்வுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் பாதுகாப்பு புலனாய்வுத்துறையின் தலைவரான மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ், உக்ரைன்ஸ்கா பிராவ்தா தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“பெப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பின்னர் புதினை படுகொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கருங்கடலுக்கும் கஸ்பியன் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள காகசஸ் பிராந்தியத்தின் பிரதிநிதிகளால் ரஷ்ய ஜனாதிபதி புதின் தாக்கப்பட்டார்.

ஆனால், இந்த கொலை முயற்சியில் இருந்து புதின் தப்பிவிட்டார். இது உண்மையில் நடந்த சம்பவம்” என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை