ஸ்கந்தா ஆரம்ப பாடசாலையில் புதிய திறன் வகுப்பறை திறப்பும் மாணவர்களின் கண்காட்சியும்
ஸ்கந்தா ஆரம்ப பாடசாலையில் புதிய திறன் வகுப்பறை திறப்பும் மாணவர்களின் கண்காட்சியும்
08.11.2024 வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் சிவசுப்பிரமணியம் நேதாஜி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திறன் வகுப்பறையினை ஸ்கந்தா நிதியத்தின் உப பொருளாளரான சுலோசனா தாமோதரம்பிள்ளை அவர்கள் நாடா வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் ஸ்கந்தா நிதிய தலைவர் வைத்தியகலாநிதி கனகரட்ணம் சிவகுமார், ஸ்கந்தா நிதிய இணை நிறுவனர் கந்தையா மகேந்திரலிங்கம் உள்ளிட்ட ஸ்கந்தா நிதிய உறுப்பினர்களும், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
புதிதாக அமையப்பெற்ற கட்டிடத்தில் ஒரு வகுப்பறை திறன் வகுப்பறையாக மாற்றப்பட்டு குறித்த வகுப்பறையில் திறன் பலகையினை நிறுவுவதற்கான நிதியை ஸ்கந்தா நிதியம் வழங்கி இருந்தது.