கோவிட் பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
கோவிட் பரவல் தற்போது கடந்த சில நாட்களாக தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 59 ஆயிரத்து 632 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பல்வேறு மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
கோவிட் பரவல் அடுத்த மாதத்தில் உச்சம் பெற்று பின்னர் குறைய துவங்கும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், நாட்டில் கோவிட் சூழ்நிலை குறித்து பிரதமர் மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
மெய்நிகர் முறையில் நடந்த இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை, சுகாதாரத்துறை செயலர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.