தற்பொழுது கிளிநொச்சிமாவட்டத்தின் கட்டாக்காளி கால்நடைகளின் தொல்லை மிகவும் அதிகரிப்பு இரவு பகலாக அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக இரவு பகல் வேளைகளில் வீதி விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும் இது தொடர்பாக கரைச்சிப் பிரதேச சபையினரிடம் பலமுறை தெரிவித்தபோதும் எந்தவித பயணம் எட்டப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக வீதிகளில் இரவு வேலைகள் கால்நடைகள் சுற்றித்திரிவதன் காரணமாக வீதி விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அத்துடன் பொது இடங்கள் மற்றும் வர்த்தக நிலையம் சந்தை போன்ற பகுதிகளில் இரவு வேலைகளில் கால்நடைகளை அசுத்தம் செய்வதன் காரணமா வர்தகர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவித்துள்ளனர்