இலங்கைக்குப் பயணம் செய்யும், தமது நாட்டுக் குடிமக்களுக்கான பயண ஆலோசனையைப் புதுப்பித்துள்ள பிரித்தானியா, மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையுடன் நாட்டில் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாக எச்சரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள பயண ஆலோசனையில், வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு காரணமாக, இலங்கை தற்போது அடிப்படைத் தேவைகளுக்கான பற்றாக்குறையை அனுபவித்து வருவதாக பிரித்தானியாதெரிவித்துள்ளது.
“பலசரக்கு கடைகள், எரிவாயு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசைகள் இருக்கலாம்.
உள்ளூர் அதிகாரிகள் மின்சாரத்தைப் பங்கீடு செய்து விநியோகிக்கலாம், இதன் விளைவாக மின்சார துண்டிப்பு ஏற்படலாம்.
சமூகத்தில் கோவிட் தொற்று பரவி வருவதால், குறுகிய அறிவிப்பில் விமானங்கள் மற்றும் விமான நிலைய நடவடிக்கைகளின் மாற்றங்கள் ஏற்படலாம்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் முடக்க நிலை அறிவிக்கப்படலாம் என்றும், நாட்டில் குறுகிய அறிவிப்பில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் பிரித்தானிய அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.