ஈரானிய கடற்படை நிர்மூலமாக்கப்பட்டது! – 158 போர்க்கப்பல்கள் கடலுக்கு அடியில் என ட்ரம்ப் அதிரடி
மேரிலாந்தில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் ராணுவம் மற்றும் கடற்படை முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
“அவர்களின் ஒட்டுமொத்த கடற்படையும் இப்போது நீருக்கு அடியில் உள்ளது; சுமார் 158 போர்க்கப்பல்கள் அழிக்கப்பட்டுவிட்டன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் கண்ணிவெடி வைக்கும் கப்பல்களும் (Mine droppers) பெருமளவு ஒழிக்கப்பட்டுவிட்டதால், ஈரானால் இனி கடல்சார் சவால்களை விடுக்க முடியாது என அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
ஈரானுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கையாக, இன்று முதல் ஒரு மாபெரும் எரிசக்தி முற்றுகை (Energy Blockade) அமலுக்கு வருவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் தனது எண்ணெயை சர்வதேச சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்கும் நோக்கில் ஏனைய நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், இந்த விவகாரத்தில் அமெரிக்காவிற்குப் போதிய ஆதரவு வழங்காத நேட்டோ (NATO) நாடுகள் மீது ட்ரம்ப் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.





