Welcome to Jettamil

“இஸ்ரேல் மனிதகுலத்தின் சாபம்” – பாகிஸ்தான் அமைச்சரின் கருத்தால் கடும் ஆவேசம் அடைந்த இஸ்ரேல்

Share

“இஸ்ரேல் மனிதகுலத்தின் சாபம்” – பாகிஸ்தான் அமைச்சரின் கருத்தால் கடும் ஆவேசம் அடைந்த இஸ்ரேல்

லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தீவிரத் தாக்குதல்களைக் கண்டித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், “இஸ்ரேல் மனிதகுலத்தின் சாபம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

பாகிஸ்தான் அமைச்சரின் இந்தக் கருத்து யூத அரசை அழிப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்பு என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியான் ஸார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “யூத அரசை புற்றுநோய் என்று கூறுவது மூர்க்கத்தனமானது” என அவர் சாடியுள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிப்பதாகக் கூறிக்கொள்ளும் ஒரு நாடு, இவ்வாறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அமைச்சரின் இக்கூற்று அப்பட்டமான யூத விரோத அவதூறு என கிடியான் ஸார் சுட்டிக்காட்டியுள்ளதுடன், பயங்கரவாதிகளிடமிருந்து இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் என்றும் உறுதிபடக் கூறியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை