Welcome to Jettamil

யாழ். மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்து கிஷானி சாதனை – கணவனை இழந்த தாயின் கண்ணீருக்குக் கிடைத்த வெற்றி!

Share

யாழ். மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்து கிஷானி சாதனை – கணவனை இழந்த தாயின் கண்ணீருக்குக் கிடைத்த வெற்றி!

2025-ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, உயிரியல் தொழில்நுட்பத் துறையில் (Bio-Technology) யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவி தேவதாஸ் கிஷானி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

கிஷானி யாழ். மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 27-வது இடத்தையும் பெற்றுத் தனது கல்லூரிக்கும் தீவகப் பகுதிக்கும் அளப்பரிய பெருமை சேர்த்துள்ளார்.

கிஷானியின் இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு பெரும் கண்ணீர் கதை ஒளிந்துள்ளது. அவர் 10 மாதக் குழந்தையாக இருந்தபோதே, கடற்றொழிலுக்குச் சென்ற அவரது தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

தந்தையற்ற நிலையில், கூலித் தொழில் செய்து பல இன்னல்களுக்கு மத்தியில் கிஷானியை அவரது தாயார் படிக்க வைத்துள்ளார். நிம்மதியாக அமர்ந்து படிக்க ஒரு முறையான வீடு கூட இல்லாத நிலையிலும், வறுமையைத் தனது கல்விக்குத் தடையாகக் கருதாமல் கிஷானி இச்சாதனையைப் புரிந்துள்ளார்.

கிஷானியின் இந்த வெற்றியானது, கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் எந்தச் சூழலிலும் சாதிக்கலாம் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை