யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்: காவல்துறையினர் மீது தாக்குதல்: இருவர் காயம்
யாழ்ப்பாணம் (Jaffna) நெடுந்தீவு பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி மதுபானசாலையில் நேற்று (16.09.2025) இரவு 7 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருவர் வாள்வெட்டுக் காயங்களுக்கு ஆளாகினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் மீது வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோட முயன்றனர். அப்போது, ஒரு நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நெடுந்தீவு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய மற்றவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த குழுவினர் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் சென்ற பொதுமக்களை மிரட்டியதாகவும் பொதுமக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதே மதுபானசாலையில் இதற்கு முன்னரும் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





